Sunday, June 24, 2007

சார்ஜா வாழ்க்கை :

எனது கம்பனியில் இருந்து ஒருவன் விலகிவிட்டான் . அதனால் , அவனது பொறுப்பும் எனக்கு வந்தது . கூடுதல் பொறுப்பு குறித்து எனக்கு கவலையில்லை . எனது கவலையெல்லாம் அபுதாபியினை விட்டு வர வேண்டுமே என்பது தான் . தனிமை, ஆபிஸில் என்னைக் கேள்வி கேட்க யாருமில்லாதது , வேலைநேரமும் காலமும் என் தீர்மானத்தில் இருப்பது , சில நண்பர்கள் ,இரண்டு வாரத்திற்கு ஒரு தடவை அண்ணி வீட்டு சாப்பாடு , அக்ஷயின் மழலை என்று எனது அபுதாபி வாழ்க்கை அற்புதமாகவும் , இனிமையாகவும் சென்று கொண்டிருந்தது . அதனை விட்டு வர மனமில்லை . இருந்தாலும் வேறு வழியிருக்கவில்லை . ஒரே ஆறுதல் , மாதத்தில் இரண்டு தடவை அபுதாபி பயணம் இருப்பது .

சார்ஜா வந்த முதல் நாளே வேலை அதிகம். விருப்பமில்லாமல் வேலை செய்தேன் . அடுத்த நாள் வெள்ளி, வாராந்திர விடுமுறை .கம்பனியில் அனைவருடனும் ஒரே போல் பழகுவதால் , இங்கு அனைவருக்கும் என்னைப் பிடிக்கும் . குறிப்பிட்டு சொல்ல வேண்டியது இரண்டு பேர் . ஒருவன் மது ( மலையாளி ) , மற்றவன் வேம்பு ( தமிழ் ) . இருவருக்கும் ஒத்துப் போகாது . மது பேருக்கு ஏற்றாற் போல் எப்பவும் தானும் தன் பாட்டிலும் உண்டு என்று இருப்பான் . வேம்புவும் பேருக்கு ஏற்றாற் போல் தான் , ஒரே கசப்பு . ஐயன் . அதனால் அதற்கு உரிய சகல வித லட்சணங்களும் குறையாது , அடுத்தவரை குறைகூறிக் கொண்டும் , தன்னை உயர்த்திப் பேசிக் கொண்டே இருப்பது அவனது பழக்கம் .ஆனால் இருவரும் என்னிடம் ஒரே மாதிரி தான் பழகுகிறார்கள் . மது என்னை "மகனே " என்றும் , வேம்பு என்னை "தம்பீ" என்றே அழைப்பது வழக்கம் .

இருவருடனான எனது சில அனுபவங்களே இனி வருவன .
மது: போன வார வெள்ளிக்கிழமை சாயந்திரம் சிவாஜி பார்த்துவிட்ட சந்தோஶத்தில் இருந்தேன் . அப்பொழுது சித்தப்பா ( மது ) வந்தார் . "பீச்சுக்கு " அழைத்தார் . சந்தோசமாக உடன் சென்றேன் . போகும் வழியிலேயே ஜம்பொ பீர் பாக் வாங்கிக் கொண்டோம் . அஜ்மனில் உள்ள பீச்சுகள் தனிமைக்குக் பேர் போனவை. அதுவும் அங்கு பெரும்பாலான இடங்களில் கட்டிட பணிகள் நடைபெறுவதால் , அதற்குப் பின்னால் இருக்கும் பீச்சுக்கு போவது தடைசெய்யப்பட்டுள்ளது . அப்படி தடைசெய்யப்பட்ட இடம் ஒன்றில் சென்று அமர்ந்தோம் . மது திடீரென்று , "நான் கொஞ்சம் தனிமையில் இருக்க வேண்டும் " என்றான் . நானும் எனது பங்கான பீரை எடுத்துக் கொண்டு தனியாக அமர்ந்தேன்.

கடல் எப்பொழுதும் இனிமையானது. எனக்கும் கடலுக்கும் அதற்கு முன்பான உறவினைப் பற்றி நினைத்துப் பார்த்தேன் . பாட்டியுடன் எனது கன்னியாகுமரிப் பயணம் , என்னவளுடன் விவேகானந்தர் மண்டபம் சென்றது , சென்னை மெரினாவில் நடந்த வீர விளையாட்டு , கர்நாடகா கோவா பார்டரில் தனிமையான கடற்கரை ,சுனாமி நிவாரண பொருட்கள் வழங்க கன்னியாகுமரி சென்றது , அபுதாபிக்கு கிளம்பி வரும் முன் நானும் சிவாவும் தனியாக மெரினா சென்றது என கடலுடனான எனது அனுபவங்கள் நினைத்துப் பார்க்கும் பொழுதே இனிமையும் கவலையும் ஒரு சேர தர வல்லவை. நானும் , பீரும் எனது எண்ணங்களுமாக பொழுது இனிதே கழிந்தது .

பீச்சில் நாங்கள் இருவர் மட்டுமே !! அதுவும் தனித்தனியாக . மணலில் எனக்குப் பிடித்தவர்களின் பெயரை எழுதுவேன் . கடலலை மூன்றுமுறை அருகில் வந்தும் , அப்பெயர்கள் அழியாமல் இருந்தால் , அவர்கள் காலம் முழுவதும் என்னுடனே இருப்பார்கள் என்ற நம்பிக்கை!! சில சமயங்களில் நமக்குப் பிடித்த பதில் வரும் , சில சமயத்தில் வேறு மாதிரியாக ! அதே போல் எதாவதொரு ஆசையை நினைத்துக் கொண்டு கடலுக்கு அருகில் நிற்பேன் . அடுத்ததாக வரும் கடலலை நம் காலை நனைத்துச் சென்றால் , அந்த ஆசை நிறைவேறும் என்றும் , நனைக்காமல் சென்றுவிட்டால் அது நிறைவேறாது என்று சிற்சில விளையாட்டுகள் விளையாடினேன் .

கிளம்பும் சமயமாகிய பொழுது , மதுவுக்கு அருகில் வந்தேன். உற்று நோக்கிய பொழுது தான் தெரிந்தது, அவன் அழுதிருக்கிறான் என்று . நான் அவனிடம் ஒண்ணும் கேட்கவில்லை . என்னிடம் சொல்ல முடியாத விஶயமாக இருக்கலாம் , அல்லது என்னிடம் சொல்வது பிடிக்காமல் இருக்கலாம் . ஆனால் " சொல்லப்படாத சோகங்கள் " இன்னும் அதிக வலியினை தருபவை .!!

வேம்பு : அமாவாசை அன்று மட்டும் அசைவம் தவிர்த்து , மாதத்தின் மற்ற அனைத்து நாட்களிலும் அசைவம் தன் சாப்பாடில் இருக்கும் படி பார்த்துக் கொள்ளும் சுத்த பிராமணன் !! வயது நாற்பதைத் தாண்டி விட்டாலும் , அவனை நேரிட்டு பார்த்து மதிப்பிட்டால் ௩0 வயது தான் இருக்கும் என்று சொல்லலாம் . நல்லவன் .... அவனுக்கு மட்டும் !!

ஒரு தடவை பேச்சுவாக்கில் " அண்ணா , நீ தான் நல்லா பாடுறியே , சினிமால ட்ரை பண்ணுணா " என்றேன் . பதில் என்னயே திக்கு முக்காட செய்தது "எங்க வீட்டுல கூட இத தான்டா சொன்னாங்க , விசா வந்துடுச்சு , வேற என்ன பண்ணுறது , அதான் வந்துட்டேன் !! ".அன்று முதல் ஆரம்பித்தது சனி . என்னை எப்பொழுது தனியாக பார்த்தாலும் , அவனுக்குள் இருக்கும் எஸ் .பி .பி முழித்துக் கொண்டு விடுவார் !!கஶ்ட காலம் !!

" முகிலினங்கள் அலைகிறதே .....
முகவரிகள் தொலைந்தனவோ ????? " என்று ஆரம்பித்து "முகவரிகள் தொலைந்ததனால் ......
அழுகிறதே , அது மழையோ ???? " என்று முடிக்கும் பொழுது , எதிரில் அமர்ந்திருக்கும் நமது கண்களிலும் மழை இருக்கும் !!

நல்ல மப்பில் இருக்கும் பொழுது , " ஐயனுகள நம்பவே கூடாதுடா , தானும் முன்னேற மாட்டாங்க , மத்தவனையும் முன்னேற விட மாட்டாங்க " என்று தமது பரம்பரை ரகசியத்தினை போட்டு உடைக்கும் நல்ல மனசுக்காரர் . மனைவி குடிக்கக் கூடாது என்று சொல்லிவிட்டதால் , குடிப்பதை இரண்டு வாரங்களாக நிறுத்தி வைத்திருக்கிறார் .

இதற்கிடையில் போன வாரம் நானும் மதுவும் பீச்சுக்குச் சென்று தண்ணியடித்துவிட்டு திரும்பியது அவருக்குப் பிடிக்கவில்லை போலிருக்கிறது . திடிரென்று " நீ அளவுக்கு மீறி தண்ணி அடிக்கிறடா .. ( இத்தனைக்கும் அன்று நான்கு பீர் மட்டும் தான் அடித்திருந்தேன் !! ) , உடம்புக்கு ஒத்துக்காது , பார்த்துக்கோ ... " என்று சராமரியாக இலவச அறிவுரை வழங்க ஆரம்பித்தார் !! அடுத்த நாள் மதுவிடம் போய் சண்டை பிடித்திருக்கிறார் , அவன் தான் தண்ணி வாங்கிக் கொடுத்து என்னைக் கெடுப்பதாக !! "

இதற்கு மூன்றே காரணங்கள் தான் இருக்க முடியும் என்று தோன்றுகிறது . ஒன்று : தான் தண்ணி அடிக்கவில்லையே , இவன் மட்டும் போய் தண்ணி அடித்துவிட்டு வருகிறானே என்ற இயலாமையினால் வரும் ஆதங்கக் கோபம் .
இரண்டு :தண்ணியடிப்பதால் வரும் விளைவுகளை அறிந்துகொண்ட ஞானம் !! (மூன்று வாரங்களுக்கு முன் என்னுடன் அமர்ந்து தண்ணியடிக்கும் பொழுது வராத ஞானம் , இப்பொழுது மட்டும் திடிரென எப்படி ? )
முன்று : உண்மையிலேயே என்னைத் திருத்தும் நல்லெண்ணம் !! ( இதற்கு வாய்ப்பு கம்மி , ஏனென்றால் இவன் ஐயன் . அப்படியே இருந்தாலும் என்னைத் திருத்துறதுக்கு இவன் யாரு ???? )

விளையாட்டும் வியாக்கியானமுமாக விரதே சென்று கொண்டிருக்கிறது வாழ்க்கை !!!

மீண்டும் வருகிறேன் !!

1 comment:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.