Sunday, June 24, 2007

எனக்குப் பிடித்தவர்கள் : இரண்டு

சினிமாவில் ரஜினிக்கு அடுத்தபடியாக எனக்கு பிடித்தது அஜீத் . நான் அஜித் ரசிகனானது சுவாரஸ்ய வரலாறு !! வெறுமனே இருக்கும் பொழுது அரட்டை அடிப்பது , பசங்களின் பொழுதுப்பொக்கு . அதுபோல ஒரு நாள் , கே எஸ் ஜி எஸ்டேட்டில் இருக்கும் பொழுது , இரவுச் சாப்பாட்டை முடித்து விட்டு வந்தோம் . கச்சேரி தொடங்கியது . பேச்சுவாக்கில் அஜித்தா விஜய்யா ? என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சர்ச்சையில் வந்து நின்றது . . இந்த இடத்தில் பிரசன்னா பற்றி சொல்ல வேண்டும் . காலையில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது , இனிமையான அக்காலை நேர தூக்கத்தினை கெடுக்கும் வகையில் , திடிறென்று ஏதாவது சத்தமொ , பேச்சோ கேட்டால் உறுதியாக சொல்லிவிடலாம் , பிரசன்னா எழுந்துவிட்டான் என்று !! அது பொல் இரவு ரூமிற்கு வரும்பொழுது நிசப்தமாக இருந்தால் , சத்தியம் செய்து சொல்லிவிடலாம் பிரசன்னா தூங்கி விட்டான் என்று !! காலை எழுவது முதல் மாலை அடங்கும் வரை எதையாவது பேசிக்கொண்டும் , முக்கியமாக யாரையாவது ஓட்டிக் கொண்டு இருப்பது பிரசன்னாவின் அன்றாட வேலைகளுள் முதலானது . அப்படிப்பட்ட பிரசன்னாவை எதிர்த்துப் பேசி , அதனால் ஓட்டு வாங்கிக் கொண்டும் , அவனை ஓட்டிக் கொண்டும் இருப்பது அலாதியான சுகம் !! பிரசன்னா விஜய் பக்கம் , அதனால் நான் அஜித் பக்கம் நின்றேன் !!

ஆனால் நானே எதிர்பாராத வகையில் பிரசன்னாவிற்கு சப்போர்டாகவும் , விஜய்கு ஆதரவாகவும் நிறைய பேர் ஆகிவிட்டார்கள் !! பிரசன்னா , அசோக் , காமராஜ் , தியாகராஜன் , என பேட்ஸின் பெரும்புள்ளிகள் அந்தப் பக்கம் . கூட்டம் பார்த்து கடலையும் அப்பக்கம் போய்விட்டான் . நானும் , கார்த்தியும் , பாலாஜியும் மட்டுமே இப்பக்கம் . வெண்மணி பின்னால் வந்து சேர்ந்தான் . இதில் பாலாஜி மதில் மேல் இருக்கும் ’ குருட்டு , மற்றும் செவிட்டுப் பூனை ’ , அதனால் அப்பக்கம் போய் விட வாய்ப்பு அதிகம் !! தனியாக மாபெரும் கூட்டத்தினை எதிர்த்து பேசிப் போராடுவதும் சுவாரஸ்யமானது . காலை முதல் மாலை வரை இதைப் பற்றியே பேச்சாயிருக்கும் . அனுபவித்தேன் !! சொல்லிவிட்டொம் என்பதற்காகவே அஜித் படங்களை விரும்பிப் பார்ப்பேன் . நாளைடைவில் அஜித்தின் வெறித்தனமான ரசிகனானேன் !!

பசங்களுடன் பார்த்த அஜித் படங்களில் மறக்க முடியாதது ரெட்டும் , சிட்டிஸனும் !! புதூரில் மேட்ச் ஆடிய பொழுது ரிலீஸானது ரெட் . அப்பொழுது சிகரெட் வாங்கக் கூட என்னிடம் காசு இல்லை . காட்ஸிடம் கேட்டேன் . அவரும் முடியாது என்று சொல்லிக்கொண்டே வந்தார் . ரெட் படத்திற்கு பொனோம் . படம் ப்ளாப் . இன்டர்வலில் "காட்ஸ் " என்றென் . உடனே அவர் , பையில் இருந்த காசு எடுத்துக் கொடுத்து " போடா போய்ட்டு வா , அப்படியே எனக்கும் காபி வாங்கிட்டு வா , தலைய வலிக்குது " என்றார் . படம் பார்த்துவிட்டு திரும்பும் வழியில் , " படம் கலக்கல் , கண்டிப்பாக இரண்டாவது தடவை பார்க்க வேண்டும் " என்றேன் . பதிலுக்கு ரோட்டில் போய்க் கொண்டிருந்த யாரோ , " இந்தப் படத்தை இன்னொரு தடவை பார்க்குறதுக்கு சாகலாம் " என்றது மறக்க முடியாது !! இந்த படத்திற்காக தான் சிவா நெய்வேலியில் நூறு ருபாய் ப்ளாக்கில் படம் பார்த்தது !!

நான் அஜித்தின் புகழ் பாட , பதிலுக்கு தியாகராஜனோ பிரசன்னாவோ அதனை ஓட்ட , என்று கல்லூரிக் காலங்கள் இனிதே கழிந்தன . பெயிண்டின் அக்கா கல்யாணமும் , தாமு அக்கா கல்யாணமும் அடுத்தடுத்த மூன்று நாள் இடைவேளியில் வந்தது . பேட்ஸ் அனைவரும் ஒரு டூர் பொல கிளம்பினோம் . கார்த்தி வீட்டில் சாப்பாடு , பெயிண்ட் அக்கா கல்யாணம் பின்னர் மதுரையில் தாமு அக்கா கல்யாணம் என்று ப்ளான் செய்தோம் !! தஞ்சாவூரில் இருக்கும் பொழுது ரிலிஸானது சிட்டிஸன் . தியேட்டருக்குச் சென்றால் நல்ல கூட்டம் . டிக்கட் கிடைத்து நான் மட்டும் உள்ளே சென்றேன் . பசங்களுக்கு டிக்கட் கிடைக்கவில்லை !! அதனால் வெளியே வந்தேன் . அப்புறம் தான் தெரிந்தது , டிக்கட் கிடைக்காத எரிச்சலோ , சந்தோஶமோ பிரசன்னா அதனை சலித்துக்கொண்டு தரையில் உதைத்து வெளிப்படுத்த , அதனை பார்த்த போலீஸ்காரர் அவனை காலில் அடிக்க என்று களேபரமானது !! தஞ்சாவூரில் படம் பார்க்கவில்லை . மதுரை கிளம்பினோம் .

மதுரை என் சொந்த ஊர் . அங்கு தான் " நோட் புக் " கல்யாண மஹாலில் வைத்து தாமு அக்காவின் கல்யாணம் . அங்கிருந்து அரைமணி நேர நடைதூரத்தில் அபிராமி தியேட்டர் . சிட்டிஸன் ரிலிஸ் !! நான் , நொட்ஸ் , காமராஜ் , பாலாஜி , கடலை , கார்த்தி என ஒரு கூட்டமே படம் பார்க்கச் சேன்றொம்.இரவு பத்து மணி காட்சிக்கு ஒன்பது மணிக்கே சென்றுவிட்டோம் . கவுண்டரில் கூட்டமே இல்லை . நொட்ஸ் தான் கவுண்டரில் முதலாவதாக இருந்தான் . அப்பொழுதே அவனிடம் சொன்னேன் , " மச்சி டிக்கட் கொடுக்குற நேரத்தில நிறைய பேர் வருவாங்க , அதனால ஜாக்கிரதையா இரு !! " , சொன்னது பொலவே டிக்கட் கொடுக்கும் நேரத்தில் எங்கள் மேல் ஏறிக்கொண்டும் , மிதித்துக்கொண்டும் சிலர் வர , நோட்ஸ் ஆவேசப்பட்டு சவுண்ட் விட , எனக்கோ பயம் , "எங்கே மெட்ராஸில் விட்ட பாக்கியினை மதுரையில் வாங்கிவிடுவார்களோ என்று !! நல்லவேளை பதில் சவுண்ட் வந்தவுடன் நொட்ஸ் அமைதியாகிவிட்டான் !! படம் பார்த்துவிட்டு அனைவரும் நடந்தே திரும்பிவந்தது மறக்க முடியாதது !! பின்னர் சில காலம் கழித்து பர்கூர் துரைஸ் பேரடைஸில் சிட்டிசன் இறங்கியது !! மழையோடு நனைந்து கொண்டு நானும் நொட்ஸும் படம் பார்த்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது . படத்துக்காக அல்ல , படத்தின் இண்டர்வலில் கிடைக்கும் டீக்காக தான் நொட்ஸ் படத்திற்கு வருவான் . படம் ஆரம்பித்ததும் ஆரம்பிக்கும் இவனது தூக்கம் , இன்டர்வலில் முடியும் , பின்னர் மறுமடியும் ஆரம்பிக்கும் !! எனக்கோ வழித்துணைக்கு ஒரு ஆள் !! அவ்வளவுதான் .

அபுதாபி கிளம்பும் முன் , பாண்டிசேரி சென்றோம் . அங்கு திருப்பதி ரிலிஸ் .பசங்கள் அனைவரும் கூட்டமாக சென்றோம் !! படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே ரிசல்ட் தெரிந்துவிட்டது !! இரண்டரை மணி நேர படத்தில் , கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நானும் சிவாவும் வெளியே தான் கூல் ட்ரிங் சாப்பிட்டும் , டீ குடித்தும் நேரம் போக்கினோம் !!
அஜித்தின் அனைத்துப் படங்களையும் பார்த்துவிடுவது எனது ’தலை’யாய கடமையாய் இருந்தது , இருக்கிறது !! . வேலைக்காகத படமானாலும் நான்கு தடவை பார்த்துவிட்டால் தான் நிம்மதி . குட்டி அஜித் வரப்போவதாக பேப்பரில் அறிந்தேன் . சந்தோஶம் , மகிழ்ச்சி !!

பெரிய தலை பட ரிலிஸுக்காக சின்ன தலை வேய்ட்டிங் !! கிரிடம் கண்டிப்பாக கிரிடம் சூடும் . தவறிவிட்டால் , பில்லா ௨00௭ அதற்கு பதில் சொல்லும் !!

மீண்டும் வருகிறேன் .

No comments: