Tuesday, June 5, 2007

தனிமையில் எனது எண்ணங்கள் :

மாற்றம் மானிடதத்துவம் என்று சொல்வார்கள் . அது உண்மை என்று தொன்றினாலும் , இவ்வளவு சீக்கிரம் எற்படும் மாற்றங்கள் சரியா என்று தொன்றத் தொடங்கியுள்ளது .மாற்றங்கள் எனில் , எண்ணங்களின் மாற்றங்கள் . சற்று நாள் முன்பு வரை , சரி என்று தொன்றிய விஷயங்கள் , இப்பொழுது தவறு என்று தோன்றுகிறது . இவைதான் முக்கியம் என்றெண்ணியிருந்த விஶயங்கள் , இப்பொழுது அர்த்தமில்லாமலே போகின்றன . ஒரு காலத்தில் பிடித்ததும் , ஏங்கியிருந்ததுமான விஶயங்கள் , இன்று அர்த்தமற்று போகிறது .

தனிமையில் இருக்கும் பொழுது , அதுவும் தண்ணியுடன் இருந்துவிட்டால் , நான் பலவற்றைக் குறித்தும் நான் சிந்திப்பது உண்டு . நட்பு எது வரை ? எதிர்பார்ப்புகள் சரியா , தவறா ? போன்றவற்றில் ஆரம்பித்து , போதையில் தலை சாயும் வரை சிந்தித்திருப்பேன் .இது ராமக்கிருஶ்ணனின் கேள்விக்குறி இல்லை !! விடை கிடைக்க வேண்டி ஒரு சிந்தனைப் பயணம் !! காலேஜ் படிக்கும் பொழுது , யாராவது என்னிடம் , நண்பர்கள் முக்கியமா , குடும்பம் முக்கியமா ? என்ற கேள்வி எழுப்பியிருந்தால் , கண்டிப்பாக நண்பர்களே முக்கியம் என்றிருப்பேன் . ஆனால் இப்பொழுது அதே கேள்வியினை யாராவது கேட்டால் , கண்டிப்பாக எனது பதில் வேறாகத் தான் இருக்கும் .பொறுப்புகள் கூடிக் கொண்டே போவது தான் காரணமா, இல்லை அது தான் நிஜமா என்று தெரியவில்லை , ஆனால் இப்பொழுது தொன்றுகிறது , குடும்பம் முக்கியம் என்று !! தேவையில்லாமல் கூட்டம் சேர்த்துக் கொண்டும் , அரட்டை அடித்துக் கொண்டும் இருப்பதினால் மட்டும் என்னால் , அதாவது இப்பொதைய குமாரசாமியால் இருந்துவிட முடியாது என்றே தோன்றுகிறது . ! அது ஒரு சுகம் , இனிமை , அந்த அந்த வயதிற்குள் இழந்துவிடக் கூடாத அனுபவம் . நான் அதனை நன்றாகவே அனுபவித்தாகிவிட்டது !!

அந்த சுகத்தையும் , அனுபவத்தினையும் நீட்டிக்க வேண்டும் என்ற எண்ணத்தினாலும் , பேராசையிலும் , தான் சென்னையில் நமக்கென்று நமக்காகவென்று ஒரு பிளாட் என்றது . அனைவரும் ஒரே குடும்பமாக ஒன்றாக கழிக்கவல்ல ஓர் இடம் !! வாழ்வின் கடைசிவரை ஒருவர் மற்றவரின் சுகதுக்கங்களில் பங்கேடுத்துக் கொண்டு , நாம் அனுபவித்திறாத , நாம் ஆசைப்படும் அனைத்தையும் நமது சந்ததியினருக்கு தரும் வாய்ப்பையும் ஏற்படுத்திக்கொண்டு , சுகமாய் இருக்க நல்லதொரு இடம் !! .இதில் ஆரம்பம் முதலே பிரச்சனைகள் !! சேருவான் என்றேண்ணியிருந்தவன் காலை வார .....என்பதில் ஆரம்பித்து , அன்று முதல் இன்று வரை ஏகத்துக்கும் ஏகத்துக்கும் பிரச்சனைகள் , மனஸ்தாபங்கள் , கோபங்கள் !! இத்திட்டத்தின் அடிப்படை நோக்கத்தினை விட்டு வெளியேறுகிறோம் என்பது மட்டும் புலனாகிறது !!நான் இந்த ப்ளாகில் எழுத எண்ணியிருந்த விஶயத்தை விட்டு , தடம் மாறிவிட்டேன் , மீண்டும் விஶயத்திற்கு வருகிறேன் !!

’தளபதி’ ரஜினி அளவிற்கு நாம் இல்லாவிட்டாலும் , மம்முட்டி அளவிற்கு கூட இருக்க இயலாதவர்களை என்னவென்று சொல்வது ? நாம் செலுத்தும் அன்பும் அக்கறையும் , குறைந்தபட்சம் பாதியளவாவது திரும்ப கிடைத்தால் பரவாயில்லை , ஆனால் பாலைவனத்திற்கு இறைத்த நீரானால் ? உண்மையில் யாராலும் தாங்க முடியாது என்றே தோன்றுகிறது !! கண்டிப்பாக என்னால் முடியவில்லை !! காதலி தன்னை நேருக்கு நேர் நிராகரிக்கும் கொடுமைக்கு மேலானது அது !!

எதிர்பார்ப்புகள் இல்லாதது தான் நட்பு என்கிறான் , இங்கிருக்கும் நண்பன் (?) ஒருவன் . அதுவே சரி என்றாலும் எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கையோ , சொந்தமோ , நட்போ தேவையா என்ன ? எனக்குத் தெரியவில்லை . பதில் எப்பொழுது உறைக்கும் என்றும் தெரியவில்லை . விளையும் என்ற நம்பிக்கையில், காலந்தோறும் விழலுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருக்க நான் ஒன்றும் மகாத்மா இல்லை , மனிதன் தான் !! சிவாவை போல் இருக்க நினைக்கிறேன் . யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது நட்பையும் , குடும்பத்தையும் சரிவிகிதத்தில் சமாளிப்பான் .

திகட்ட திகட்ட அனுபவிக்கும் எதுவும் தித்திக்கும் என்பார்களே அது போல , திகட்ட திகட்ட வாரி வழங்கும் நட்பும், பாசமும் திகட்டும் பொலிருக்கிறது . அதாவது பெறுவருக்கு திகட்டிப் போகும் அளவிற்கும் , அளிப்பவர் வெறுத்துப் போகும் அளவிற்கும் !!

இப்பொழுதெல்லாம் நான் தனிமையினை அதிகம் நாடுகிறேன் . நண்பர்கள் அருகில் இல்லை என்பதல்ல காரணம் , தனிமையாய் இருக்க விரும்புகிறேன் என்பதே காரணம் . தனிமையில் வானமே எல்லை !! கற்பனா உலகில் இஶ்டம் போல் சஞ்சரிக்கலாம் ! தனியாக படுத்துக் கொண்டு விகடன் படிக்கும் அந்த நேரங்கள் இனிமையானவை . அந்த நேரத்தில் போன் கால் வந்தால் , எரிச்சலுருகிறேன் !! சபித்துக்கொண்டே போன் எடுக்கிறேன் !! எதிர்முனையில் இருப்பவனின் உத்தேசம் எனது நலனாய் இருப்பினும் , நடக்கக் கூடாது என்றே வேண்டுவேன் !!

ஓன்றாக கூடவே இருப்பதால் மட்டும் அன்பும், அக்கறையும் நிலைக்கும் , நீடிக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. கூடவே இருப்பதால் , மற்றவர் மீது எரிச்சலும் , கோபமுமே வருகிறது . வீணான சம்பாஶனைகளும் , தேவையில்லாத சண்டைகளுமாக இருக்கும் கொஞ்ச நஞ்ச நட்பும் நசித்துப் போகிறது . பிரிவில் தான் மற்றவரின் அன்பும் , அக்கறையும் நமக்குப் புலப்படும் !!

கல்லூரி நாட்களில் அதிகம் சந்தோசமாய் கூடி இருந்துவிட்டொம் என நினைக்கிறேன் . அப்படி இல்லாமல் இருந்திருக்கலாம் என இப்பொழுது தோன்றுதிறது . மனம் அதை நாடினாலும் , அதனை பெற முடியாத சூழ்நிலையில் நானும் , தர முடியாத அளவிற்கு ரொம்பவே பிசியாக (?) அவர்களும்!! சில சமயங்களில் , யாரையும் தொடர்பு கொள்ளாது , யாராலும் கண்டுபிடிக்க முடியாத ஏதாவது ஊருக்குச் சென்றுவிடலாம் என்று கூட தோன்றுகிறது. மாதாமாதம் விட்டிற்கு தேவையானதை மட்டும் அனுப்பிக் கொண்டு , எனக்கென எனக்காக வாழலாம் என்றும் தோன்றுகிறது !! அதுவும் சில நாட்கள் நன்றாகத் தான் இருக்கும் , நண்பர்களைப் பற்றிய நினைவு வரும் வரை !!

சிரித்திருந்த நேரங்களை பின்னாளில் நினைத்துப் பார்த்தால் , அவை அழ வைக்கும் என்று எதிலோ கேட்டது சரிதான் போலிருக்கிறது !!

மீண்டும் வருகிறேன் !!

No comments: