Tuesday, June 5, 2007

நொட்ஸ் :

சிலரைப் பற்றி நினைத்தாலே , அவர்களாது செய்கைகளின் ஞாபகங்களும் , மனோபாவமும் நமக்கு வந்துவிடும் என்று சொல்வார்கள் . அது அவர்களது தனித்தன்மை என்றே நினைக்கிறேன் !! உதாரணத்திற்கு , ரஜினி என்றால் ஸ்டைல் , ஸ்நேகா என்றால் புன்னகை , அதுபோல நொட்ஸ் என்றால் .................. வேறன்ன காமடி தான் . தன்னை அழித்துக்கொண்டு பிறருக்கு ஒளி தரும் மெழுகுவர்த்தியினைப் போலில்லாமல் , தான் செய்யும் கேனத்தனங்களால் , பிறரை சிரிக்க வைத்து , அது தெரிந்ததும் தானும் சிரித்து , அசடு வழியும் ஒரு மகாபுருஶன் !! நொட்ஸின் காமடிகள் என்றென்றும் நினைவிலிருப்பவை . நான் ப்ளாக் எழுதிக்கொண்டிருக்கும் , இந்த நேரத்தில் கண்டிப்பாக பற்பல நொட்ஸ் காமடிகள் நடந்தேறியிருக்கும் !! இதையெல்லாம் நான் எழுதவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருகையிலேயே என்னால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை . தனியாக சிரித்துக்கொண்டே எழுதிக்கொண்டிருக்கிறேன் !!

கட்டம் போட்ட லுங்கியும் , கையில்லாத முண்டா பனியனுடனும் , தலைக்கு தனது கைகளை கொடுத்துக்கொண்டும் ,தனது கால்களை டக் டக் என ஆட்டிக் கொண்டும் , திறந்திருக்கும் புத்தகத்திற்கு பக்கத்தில் , கண் மூடி படுத்துக்கொண்டிருக்கும் அவனைப் பார்க்கும் வெளியாட்கள் , இந்தியாவின் வேகமாக வளரும் பொருளாதாரத்தின் விளைவுகள் குறித்தும் , பணவீக்கத்தினை கட்டுப்படுத்துவதன் கட்டாயத்தினை குறித்தும் சிந்தனையில் இருக்கிறார் என்று நினைப்பது இயல்பு . ஆனால் எங்களைப் போன்ற அவனுடன் நெருங்கிப் பழகும் பாக்கியம் அமையப்பட்டவர்களுக்கே தெரியும் , அவன் அடுத்த வேளை சாப்பாட்டில் , காரக்குழம்பிற்கு அப்புறம் ரசம் விட்டு சாப்பிடுவதா இல்லை ரசம் விட்டு சாப்பிட்ட பின் காரக்குழம்பு ஊற்றி சாப்பிடுவதா என்பதை பற்றிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வினைக் குறித்து யோசிக்கிறான் என்று !! நானும் தாமுவும் நொட்ஸின் காமடிகளை புத்தகமாக போடுவது பற்றியும் , அவனை திரையில் வடிவமைத்து விட்டால் உண்டாகும் சிரிப்பலைகளைக் குறித்தும் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் !! இது தான் நொட்ஸ் !!!
ஆளைப் பார்த்தால் தெரியாது .

எப்பொழுதும் டக் இன் செய்யப்பட்ட சர்ட், அதற்கு மேட்சான பேன்ட் ,அடர்த்தியான மீசை என ஆள் கம்பிரமாக இருப்பான் ! நெருங்கி வந்து நம்மிடம் " ஹாய் , குட்மார்னிங் ’ என்று சொல்லிவிட்டு , வெளிநாட்டுக் கம்பனியய் விலைக்கு வாங்கிவிட்ட ரத்தன் டாட்டாவை போல் லுக் விடும் பொழுதே , நமக்கு குபீரென்று சிரிப்பு வரும் !! காரணம் , அது இரவு எழு அல்லது எட்டு மணியாக இருக்கும் !! நொட்ஸ் வேண்டுமென்றே காமடி செய்வதில்லை , ஆனால் அவன் செய்யும் எல்லாமே காமடி தான் !! ஐந்து ருபாய்க்கு பேரம் பேசிவிட்டு , ஐம்பது ருபாய் அதிகம் கொடுத்துவிட்டு வருவது ,எட்டு மணி ட்ரேயினைப் பிடிக்க சீக்கிரம் கிளம்பி வழியில் பேப்பர் படிக்க கடைக்குச் சென்று அதற்கடுத்த ட்ரேயினையும் கோட்டை விடுவது , இரண்டு வீடு தள்ளியிருக்கும் கடைக்குச் செல்ல , அரை மணி நேரம் சாவி பொடாமலேயே வண்டியய் ஸ்டார்ட் செய்வது , பொன்றவையேல்லாம் நொட்ஸ் வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் !! நமக்கோ காமடி டைம்கள் !! நொட்ஸை நான் முதன்முதலில் பார்த்தது பாலாஜி லாட்ஜில் அவன் அப்பாவுடன் என்றாலும் ,அவன் எனக்கு முதலில் பரிச்சயமானது ராமசுப்பு ஹாஸ்டலில் தான் . காலேஜ் ஆரம்பித்த நாட்களில் சாயந்திரம் ஐந்து மணிக்கெல்லாம் , மடியில் ட்ராயிங் பேடை வைத்துக்கொண்டு , கெமிஸ்டரி புக்கின் இன்ட்ரோடக்ஶன் பக்கத்தை மனனம் செய்து கொண்டிருப்பான் . பைனல் பரிட்சை நடக்கும் பொழுதும் அதையே தான் படித்துக்கொண்டிருப்பான் !! நொட்ஸ் என்பது காரணப் பெயர் . வருண்சிவம் சூடிய நாமாகரணம் !! கண்ணாடியய் வலக்கையில் பிடித்துக்கொண்டு ,காய்ந்திருக்கும் தலைமுடியய் ’வரட் வரட் ’ என இடக்கையால் அவன் தலைசீவும் அழகே அழகு !!

கல்லூரி காலத்து நினைவுகள் வருமாயின் , நொட்ஸுக்கு அதில் நீங்கா இடம் உண்டு ! . முதலாம் ஆண்டு விளையாட்டுப்போட்டிகளில் , நோட்ஸ் இடக்கையில் பேட் எடுத்து தோளில் போட்டுக்கொண்டு சென்றதும் , சென்ற வேகத்திலேயே திரும்ப வந்ததும் , திரும்பி வந்து இடக்கை தலையய் தடவிக்கொண்டிருக்க , ’சே ஒவர் பிட்ச் பால் , நான் எதிர்பார்க்கல மச்சி ’ என பீலிங் விட்டுத் திரிவதில் அவனுக்கு நிகர் அவனே !!அவனிடம் எதாவது சில்மிஶம் செய்து மாட்டிக் கொண்டால் , வலக்கை நமது சட்டைக்காலரை பிடித்துக் கொண்டிருக்க , பருக்கள் நிரம்பிய அவனது முகமும் , இடக்கை முஶ்டியும் நம் முகத்தருகே வந்து பயமுறுத்தும் , நமக்கொ ஜுராஸிக் பார்க் இரண்டாம் பாகம் பார்த்தது போலிருக்கும் !!

ராமசுப்பு ஹாஸ்டலில் சாயந்திர வேளைகளில் டீ என்ற பெயரில் வெந்நீர் தண்ணி தருவார்கள் . யாரும் மதிக்காத அதனை , தோற்றத்தில் ஒரு கூஜாவுக்கு சற்றே சிறியதும் , கொள்ளளவில் அக்கூஜாவை விடவும் பெரியதான ஒரு டம்பளரில் நொட்ஸ் வாங்குவான் !! அதை அவன் வாங்கிக் குடிக்கும் முன்னரே தட்டிப் பறித்து விட நானும் பிரசன்னாவும் சிவாவும் முயற்சி செய்வோம் . பெரும்பாலான நேரங்களில் நாங்கள் தான் ஜெயிப்பொம் , ஆனால் ஒரு சில நேரங்களில் நொட்ஸ் வென்றுவிடுவான் . அத்தகைய நேரங்களில் , தனது முப்பத்தியிரண்டு பற்களும் நன்றாக இருப்பபதை தெரிவிக்கும் வகையில் சிரித்துக் கொண்டும் ,தனியாக இமயமலை வரை சென்று வென்றுவிட்ட கரிகாலச்சோழனைப் போல் தன்னை பாவித்துக் கொண்டு , தனது பராக்கிரமத்தை அனைவரிடமும் பறைசாற்றிக்கொண்டு அரைமணி நேரம் திரிவான் !! ஹாஸ்டலில் சாப்பாட்டுக்கு இருக்கும் கிராக்கியய் விட , நொட்ஸின் தட்டில் சாப்பிடுவதற்கு ஏக கிராக்கி இருக்கும் !!

ஒருநாள் நானும் சிவாவும் ஒரு முக்கிய வேலையில் இருந்தோம் . திடிரென நொட்ஸ் அங்கு வந்தான் , சிவாவின் கையினை எடுத்து தன் வாயில் வைத்துக்கொண்டான் !! எங்களுக்கோ குபீர் சிரிப்பு . விஶயம் தெரிந்ததும் , அவன் முகம் பொன போக்கை பார்க்கவேண்டுமே !! யாருக்கும் தெரியாமல் சினிமாவிற்கு கிளம்பினொம். இது தெரிந்ததும் , வாத்தியார் தன் பின்னால் இருப்பதையும் பொருட்படுத்தாமல் , " எனக்கும் ஒரு டிக்கட் எடுத்துவை மச்சி " என்பதிலாகட்டும் , ஹாஸ்டலில் அனைவருக்கும் முன்பாகவே எழுந்து , குளித்து ரெடியாகி , கல்லூரிக்கு கடைசியாக வருவதிலாகட்டும் , கம்ப்யுட்டர் பிராக்ட்டிகளில் யாராலும் கண்டேபிடிக்க முடியாத அளவிற்கு தவறு செய்து மாட்டிக் கொண்டு பெயிலாவதிலாகட்டும் , ரிகார்ட் நோட்டில் முந்தைய பக்கங்களை காண்பிக்காமல் , கடைசி பக்கத்தை மட்டும் காண்பித்து மாட்டிக்கொள்வதிலும் நொட்ஸுக்கு நிகர் நொட்ஸே !! அவனிருந்திருக்காவிட்டால் , கல்லூரியின் முதலாம் ஆண்டு , தற்பொழுது வரும் விஜய் படங்களை பொலவே உப்புச் சப்பில்லாமலே இருந்திருக்கும் !!

இரண்டாம் ஆண்டு முதல் நொட்ஸ் பர்கூருக்குச் சென்றுவிட்டான் , எனினும் எங்களுடனே சுற்றிக்கொண்டிருப்பான் !! . தனியாக ரும் எடுத்த நாங்கள் , எடுத்தது தவறு எனும் முடிவுக்கு வராதிருக்க நொட்ஸும் அவன் தனது அக்கவுண்டிலும் , தியாகராஜனின் அக்கவுண்டிலும் வாங்கிக் கொடுத்தனுப்பும் புரோட்டாவும் , புல் பாயிலுமே காரணம் . பின்னர் அவனது அக்கவுண்டில் அவனுக்கே தெரியாமல் பில் ஏறத்தொடங்கியது !! இக்காலகட்டத்தில் தான் நொட்ஸ் தனது காமடியின் உச்சத்திற்கு போனது . சென்னையில் டீடிஆரிடம் மாட்டிக்கொண்ட பொழுது , சட்டென்று பஸ் டிக்கட்டை காண்பித்து எக்ஸ்டரா பைன் கட்ட வைத்தது , அவசரத்தில் லேடீஸ் கம்பார்ட்மண்டில் ஏறிக் கொண்ட எங்களை , அதன் இன்னொரு புறம் ஏறிக் கொண்ட அவன் கிண்டலடித்து பின்னர் அசடுவழிய திரும்பி வந்தது என நொட்ஸின் காமடி கிராப் , தற்பொழுதைய அஜீத்தின் மார்க்கட்டைப் போல் , எகத்திற்கும் எகிறத் தொடங்கியிருந்தது !! அனைவருக்கும் பிடித்தவனானன் நொட்ஸ் !!

மூன்றாம், நான்காம் ஆண்டு படிப்பிலும் ஸாரி காமடியிலும் , நொட்ஸ் தான் கிங். அருண்குமார் நோட்ஸ் எடுக்கச் சொல்லி , லைப்பரரிக்கு அனுப்ப , சின்சியராக நொட்ஸ் எடுத்து அதை லைப்பரரியிலேயே வைத்துவிட்டு திரும்ப என்றும் , நைட் ஸ்டடியின் பொழுது சாப்பிட வேண்டி சாப்பாடு வாங்கி மறைத்து வைக்கவும் , நுணலும் தன் வாயாலே கேடும் என்பது போல தன் வாயாலே அதை தெரிவிப்பதுமாக , நொட்ஸ் தனி ஒரு காமடி சாம்ராஜ்யமே நடத்தினான் !! முகத்தை சிரியஸாக வைத்துக் கொண்டு , அனுபவித்து பாடுவது பொல் தனது கர்ண கொடூர குரலால் ஒரு மெலடி பாட்டுப் பாடி , எதிராளியய் திணரடிப்பது நொட்ஸுக்கு கை வந்த கலை . அந்த பாடலின் வரிகளை மாற்றிப் போட்டு , திரும்ப பாடி அவனை இம்சிப்பது எங்களுக்கெல்லாம் ஒரு பொழுதுபொக்கு ! அதிலும் " மூவேந்தர் " படத்தில் வரும் என்னவொ ஒரு பாடல் ?? பைனல் பிராக்ட்டிகளுக்கு இரண்டொரு நாட்கள் முன்பு , கடலையின் ரிகார்ட் நோட் தொலைந்துவிட்டது . கே எஸ் ஜி எஸ்டேட்ய புரட்டிப் போட்டும் கிடைக்கவில்லை . பக்கத்தில் சூறாவளி காற்று அடித்தாலும் கூட , கவலைப்படாமல் ட்ராக்டர் ஓட்டும் கடலை கூட ஒரு மணி நேரம் கலங்கிப் போய் விட்டான் !! நொட்ஸ் ஓம்பிரகாஶ் ஜாவின் ருமில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தான் . அவனை சுற்றிலும் தேடியாகிவிட்டது , எழுப்பி உட்காரவைத்தும் தேடியாகி விட்டது . கிடைக்கவில்லை . சந்தேகம் வந்து , அவன் டிராயிங் பேடாக! உபயோகித்துக் கொண்டிருந்த புக்கை வாங்கிப் பார்க்க , அது கடலையின் ரிகார்ட் . கடலைக்கு போன உயிர் திரும்பி வந்தது , நொட்ஸுக்கு இருந்த உயிர் போகத் தெரிந்தது !! கல்லூரி நினைவாக யாராவது ஒரு கல்வெட்டு வைக்க ஆசைப்பட்டால் , அதில் நொட்ஸின் இந்த காமடிகள் பொறிக்கப்பட வேண்டியவை !! இப்படியும் நமக்கு ஒரு சீனியர் இருந்தார் என பின்வரும் ஜூனியர்கள் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்!!

இந்த நேரத்திலோ என்னவோ தான் திடிரென நொட்ஸின் அப்பா தவறிவிட்டார் . குடும்ப பாரமும் நொட்ஸ் மேல் தான் . சமாளித்தான் . கல்லூரியில் வேறு யாருக்கும் இல்லாத ஒரு பெருமை , எனக்கும் அண்ணாமலைக்கும் உண்டு . அது தமிழ்நாட்டு வரைப்படத்திலேயே இல்லாத நொட்ஸின் சொந்த ஊருக்குச் சென்று திரும்பியது !! தண்ணிர் ஓடாத ஆற்றைக் கடந்து தான் அவனது ஊருக்குச் செல்ல வேண்டும் . ஆயினும் மன்னார்குடியில் அம்மாவும் , தங்கைகளும் காட்டிய அன்பு நெகிழச் செய்யும் . அதுவும் நான் போயிருந்த நேரத்தில் எனக்கோ தீராத வலி !! சமாளித்தொம் !!

அண்ணாமலைக்குக் கூட கிடைக்காத ஒரு பாக்கியம் எனக்கு கிடைத்து . ஈ.பீ யில் வேலைக்குச் சேர்ந்த புதிதில் நோட்ஸ் எனது வீட்டில் தான் கிட்டத்தட்ட ஒரு மாதம் தங்கியிருந்தான் . அப்பவும் காமடிக்கு குறைவில்லை . வண்டியெய் எடுத்துக்கொண்டு ரவுண்ட் வருவது , ஒரு மணி நேரம் ஓட்டினாலும் முதல் கியரிலேயே ஒட்டுவது , எனது தந்தையுடன் வாதிட்டு எனக்கும் என் தந்தைக்குமான உறவை நேராக்குவது பொன்ற காமடிகளும் உண்டு !! இனிய நாட்கள் அவை !!

பசங்களில் எனக்கு ரோல் மாடல்கள் சிலர் உண்டு . இவர்களை போல் இருக்கவேண்டும் என சில சமயங்களில் கற்பனை செய்வதும் உண்டு . முதலிடம் அண்ணாமலைக்கு , நட்புரீதியில் இவனைப் போல் அரவணைத்துச் செல்ல யாராலும் முடியாது , இன்னொருவன் நொட்ஸ் .ப்ளான் பண்ணுவதில் சிதம்பரம் இவனிடம் கற்றுக்கொள்ள வேண்டும் !! தங்கையின் கல்யாணத்தை , தனியாளாக நின்று சிறப்பாக நடத்தினான் !! இப்பொழுது கூட என்னால் முடியுமா என்று தெரியவில்லை ! அடுத்த தங்கைக்கான செலவுக்கும் திட்டமிட்டு உள்ளான் . நல்லவன் , ஆனால் ரொம்பவே நல்லவன் !! அவன் மேல் மிகுந்த நம்பிக்கையும் , மரியாதையும் உண்டு எனக்கு . அதுவும் அவனது தங்கையினை பெண் பார்த்து சென்ற அன்று , நானும் நொட்ஸும் மட்டுமே எண்ணூரில் கடற்கரை அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம் . அன்று நான் அவன் மேல் வைத்திருந்த மரியாதை பன்மடங்கானது .வருங்காலத்தைக் குறித்து தீவிரமாக யொசிப்பதையும் , அதனை தீர்க்கமாக செயல்படுத்துவதுமாக இருந்த அவனின் இன்னொரு முகம் , கல்லூரி நாட்களில் தெரியாமல் பொனதிற்கு வருத்தப்படிகிறேன் .

மனம் கவலையாக இருந்தால் , நொட்ஸுக்கு பொன் பண்ணி பேசலாம் . கண்டிப்பாக சிரிக்கலாம் . நூறு பர்சன்ட் நான் கியாரண்டி!! எப்படியும் நொட்ஸ் இதைப் படிக்கப் போவதில்லை . அப்படியே படித்தாலும் , வரும் கமண்டினை இப்பொழுதே என்னால் சொல்லிவிட முடியும் . " இயேசு நாதர சிலுவேல அறைஞ்சாங்க ,சாக்ரடீஸ கல்லால அடிச்சாங்க , ........................" . நாயின் வாலை நிமிர்த்தத்தான் முடியுமா ? ஆனாலும் இந்த வால் நிமிர்ந்து விட கூடாது என்றே வேண்டுகிறேன் . நொட்ஸின் சேவை , எங்களுக்குத் தேவை .

அவன் எனக்கு நண்பனாதில் எனக்குத் தான் பெருமை !!

1 comment:

Sivagnanaselvan said...

Thangalada saami...

machi.. itha naan officle la irukum pothuthana padikanum..


Machi.. maranthutie... nots avan thangachiku birthday wish type panni atha thiyagu mobileku sms panathu....

Ipadi vidu patavaigalyaum nirapuga...