Monday, April 30, 2007

பொய்

நேற்று என் நண்பன் ஹபீப் வந்திருந்தான் . அவனுடன் பேசியதில் , கிட்டத்தட்ட பாதிக்கும் மேல் பொய்கள் !! சும்மா தான் !! அவன் அழகாய் இருக்கிறான் , நன்றாக இருக்கிறான் , உடல் மெலிந்து சிக் என்றிருக்கிறான் என்பது போன்ற பொய்கள் !!

பொய் இல்லாத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா ? யார் தான் பொய் சொல்லவில்லை ? சீக்கிரம் சாப்பிடாவிட்டால் மிச்சத்தை பூதம் சாப்பிட்டுவிடும் என்று காலம் காலமாக அம்மாக்கள் சொல்லதா பொய்யா?, இல்லை " நீ மட்டும் பொதும் , எனக்கு இந்த உலகத்தில் வேறு யாரும் தேவையில்லை " , "உன்னை விட அழகானவள் இந்த உலகத்தில் யாரும் இல்லை " என்று காதலர்கள் சொல்லாத பொய்யா ! இல்லை ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் ஜனநாயகத் திருவிழாவில் , சொல்லப்படாத பொய்களா? வியாபாரி பொய் சொல்லி , அவனது பொருளை மார்க்கெட்டில் தள்ளாவிட்டால் , அவனுக்கு தான் நஶ்டம் .அந்த பொருளை வாங்கும் கடைக்காரன் , அதனை நம் தலை மீது தள்ளாவிட்டால் ,அவனுக்கு தான் நஶ்டம் . அப்படி பார்த்தால் , வியாபார நோக்கமாகி கொண்டுவரும் இந்த உலகமே பொய்களால் தான் இயங்குகிறது . நானும் நீங்களும் விதிவிலக்கா என்ன ?

’ பொய் ’ என்ற அந்த வார்த்தையே எவ்வளவு நன்றாக இருக்கிறது ? அனுபவித்து உச்சரித்து பார்த்தால் , உங்களுக்கும் அதன் மேல் ஒரு தனி பிரியம் வரும் . நான் ஏன் இப்படி அடிக்கடி பொய் சொல்கிறேன் ? கண்டிப்பாக அது வளர்ப்பாக தான் இருக்கவேண்டும் . எண்னை வியாபாரம் செய்துகொண்டிருந்த அந்த நாட்களில் , என் தந்தை பொய் சொல்வதை நானே நேரில் கண்டிருக்கிறேன் !!அதற்கு முன் தினம் , எங்களுடன் வீட்டில் தான் இருந்திருப்பார் ,அடுத்த நாள் , போனில் நேற்று ராமநாதபுரம் சென்றிருந்தேன் , கொள்ளை விலை விக்குது , அதுக்கு மதுரையிலேயே முடிச்சிடலாம் என்பார் !! தந்தை அவர் எட்டடி பாய்ந்தார் , குட்டி நான் பதினாறடி பாய்கிறேன் !! அவ்வளவு தான் !!

தினப்படி ஒரு நாளுக்கு நான் சொல்லும் பொய்களுக்கு கணக்கே இல்லை . அதுவும் ஏத்தாற் போல் சேல்ஸ் பீல்டு வேறு!! எதாவது வழி செய்து ,எனது பொருளை விற்க வேண்டும் . உண்மையினை சொன்னால் , எனது பொருளை இங்கு விற்பது கடினம் .( எனது கம்பனி பொருளின் தரம் அப்படி). அதனால் , பொய் இன்றியமையாதாகி விடுகிறது . இல்லாவிட்டாழும் கூட ,பொய் சொல்வதில் எனக்கு ஒரு அலாதி பிரியம் உண்டு .

பொய் சொல்லிமாட்டிக் கொண்ட சந்தர்ப்பங்களும் உண்டு . இன்னொரு பொய் சொல்லி தப்பித்த சம்பவங்களும் உண்டு ! சின்ன வயதில் , அப்படி நடந்த சம்பவம் ஒன்று என்னால் மறக்க முடியாதது . எட்டாவது படித்து கொண்டிருந்தேன் என நினைக்கிறேன் . நானும் எனது நண்பன் பிரவீனும் படம் பார்க்கலாம் என தீர்மானித்தோம். எக்ஸாம் சமயம் ஆதலால் , காலை மட்டும் தான் ஸ்கூல் . மதியம் லீவ் . மதியமும் ஸ்பெஶல் க்ளாஸ் என்று வீட்டில் சொல்லி , நானும் எனது நண்பனும் படம் பார்ப்பதென ப்ளான் . இரண்டு நாள் அவ்வாறு படம் பார்த்தோம் . இருவர் , மிஸ்டர் மெட்ராஸ் என இரண்டு படம் பார்த்தொம் .

அடுத்த நாள் , பெரிய குடும்பம் படம் பார்க்க வேண்டும் என ப்ளான் . இதற்கிடையில் எனது அப்பா , பீஸ் கட்ட பள்ளிக்கு வந்திருக்கிறார் . பள்ளியில் ஸ்பெஶல் க்ளாஸ் ஏதும் இல்லை என்று சொல்லியிருகிறார்கள் . வீட்டிற்கு வந்திருக்கிறார் .அதற்குள் நானும் படம் பார்த்து விட்டு திரும்பியிருந்தேன் . அப்பா பள்ளிக்கு சென்றிருக்கிறார் என தெரிந்து கொண்டேன் . என்னிடம் விசாரித்த பொழுது , நான் எனது ஆசிரியரிடம் தான் ஸ்பெஶல் க்ளாஸ் படிக்கிறேன் . கோச்சிங் பிரவீண் வீட்டில் நடைபெறுகிறது என்று சொல்லி வைத்தேன் .
விதி வலிது .இல்லாவிட்டால் அடுத்த நாளேவா எனது தந்தையும் , பிரவீண் அப்பாவும் சந்தித்துக்கொள்வார்கள் ? உங்கள் வீட்டிலா கோச்சிங் என்று எனது அப்பா கேட்க , அதற்கு அவர் , ’ என்ன சார் , உங்க வீட்டுக்கு தான , பிரவீண் தினமும் வருகிறான் என்று சொல்ல , மாட்டிக்கொண்டொம் . பிரவீணுக்கு அவனது அப்பாவின் பெல்ட் . எனக்கு , என் வீட்டு குக்கர் மூடி !. ’அப்பா அடித்தால் , உனக்கு நிறைய விழுகும் என்றும் , அதனால் தான் நான் அடித்தேன் ’ என்று பின்னர் அம்மா சாப்பாடு கொடுக்கும் பொழுது சொன்னதாக ஞாபகம் !! இன்னும் கூட இதனை சொல்லி , சொல்லி என் தங்கை சிரிப்பாள்.

கல்லூரி வாழ்க்கையிலும் பொய் உண்டு . போரடித்தால் , நேரே பாலாஜியிடம் சென்று பொய் சொல்லி விளையாடுவோம் . அவன் வெகுளி . அப்படியே நம்பிவிடுவான் .இன்னொருவன் சதிஶ் ( எண்ண சட்டி ) . லண்டன்பேட்டையில் உள்ள தியேட்டரில் நண்பர்கள் அனைவரும் படம் பார்க்க சென்றொம் . காசு கம்மியாகி விட்டது . என்ன செய்வது என்று தெரியவில்லை . புரட்டி கொண்டுவர நான் ,சிவா ,அசோக் மூவரும் புதுப்பேட்டை வந்தொம் . எதிரே சதிஶ் வந்தான் . தாத்தவிற்கு உடம்பு சரியில்லை என்று சதிஶிடம் பொய் சொல்லி, இருநாறு ருபாய் பணம் வாங்கினோம் . படம் பார்க்க நாற்பது ருபாய் பொதுமானதாக இருந்தது . மிச்சப்பணத்தில் தண்ணி அடிக்கலாம் என்று நான் , சிவா , அசோக் முவரும் முடிவு செய்து மேரி ஒயின்ஸ் சென்றொம் . அதை பாலாஜி ( நோட்ஸ் ) பார்த்துவிட்டான் . அவனை அனுப்பிவிட்டு நாங்கள் தண்ணி அடித்தோம் . அவன் பஸ்ஸடான்டில் சதிஷை பார்க்க , அவன் குமாரின் தாத்தாவிற்கு உடம்பு சரியில்லை என கூற , இருவரும் நேரே பாருக்குள் வந்துவிட்டனர் . அந்த நேரம் பார்த்து சதிஶ் எமாந்தது பற்றி தான் பேச்சு ஓடிக்கொண்டிருந்தது . வேறு என்ன செய்வது ? அவனிடம் வாங்கிய பணத்தை திருப்பிக்கொடுத்து , நொட்ஸிடம் பணம் வாங்கி படம் பார்த்தொம் .

இன்னொரு சமயம் , ’சொன்னால்தான் காதலா ’ படம் பார்த்து நன்றாக இருக்கிறது என்று பசங்களிடம் சொல்லி , பின்னர் அடி வாங்கிய சம்பவமும் உண்டு . இதை பற்றி எப்பொழுது பேசினாழும் அடி உறுதி . என்ன செய்வது ? படம் பார்த்தவர்கள் அனுபவித்தது அப்படி !!!

பின்னொரு சமயம் , பாலாஜிக்கும் சதிஶுக்கும் சண்டை என கிளப்பிவிட்டு , அதனால் அடி வாங்கியதை நான் மறக்கலாம் . சிவா மறக்க மாட்டான் , பின்னே மிதியடியாழும் , குடத்தாழும் அடி வாங்கினால் யார் தான் மறப்பார்கள்?

வேலை செய்யும் பொழுது சொன்ன ஒரு பொய் வினையானது. ஆனால் நல்வினை . பிலிப்ஸில் இன்டர்வியு முடிந்ததும் மானேஜரை பார்த்தேன் .பெயர் பிரேம் சுந்தர் . பேச்சுவாக்கில் வண்டி ஓட்டத்தெரியுமா என்றார் . தெரியாது என்று சொல்லும் வழக்கம் தான் கிடையவே கிடையாதே . அதனால் தெரியும் என்றேன் . என்ன வண்டி இருக்கிறது என்றார் ? எனக்கு தெரிந்தது யமகா மட்டும் தான் . அதனால் யமகா என்று மட்டும் சொல்லி வைத்தேன். பின்னர் அவர் மதுரை விசிட் வருவதென முடிவானது . அவசர அவசரமாக பழைய வண்டி வாங்கி , அதை ஒட்டக் கற்றுக்கொண்டு , இப்பொழுது நினைத்தால் சிரிப்பு வருகிறது .

பஜாஜில் இருக்கும் பொழுது , பொய்களின் எண்ணிக்கை அதிகம் . காரணம் எனது மானெஜர் . எல்லாம் கரெக்டாக இருக்க வெண்டும் என கூறுவார் . அதனாலே நிறைய பொய் சொல்லி சமாளித்தென் !! அந்த சமயத்தில் , சுந்தர பாண்டி என்று ஒருவன் . முற்றும் துறந்த முனிவர் போல் இருப்பான் . அதுசரி , இந்த காலத்தில் , முனிவர்களை தானே நம்பக்கூடாது ? பார்ப்பதற்கு பஞ்சப்பராரி பொல் இருந்தாலும் , ரொம்பவே நல்லவன் !!. "பிழைத்துப் போ !! , உன் காசுலேயே நான் டீ குடிச்சிக்கிறென் ’ என்று சவடால் , விட்டு டீ வாங்கி குடித்துப்போவான் . அவனை கருவண்டு தான் மழைக்காலத்தில் மரம் விழுவதற்கு காரணம் என்று சொல்லி ஏமாற்றி , அவனும் அதை நம்பி .. பசங்களிடம் சொல்லி வைத்து ,, அய்யோ ,அதை நினைத்து சிரித்துக்கொண்டே வந்து இங்கு அபுதாபியில் காரில் அடிபட இருந்தது ஞாபகம் வருகிறது .

பொய்கள் இல்லாத வாழ்க்கை ? ? கஶ்டம் . ரொம்பவே கஶ்டம் . ஆனாலும் குறைத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன் . விளையாட்டு வினையாகும் முன் ஏதாவது செய்ய வேண்டும் அல்லவா? இந்த திடீர் மனமாற்றத்திற்கு காரணம் ? காந்தியின் ’சத்திய சோதனை ’ புத்தகத்தினை மூன்றாவது முறையாக படிப்பது கூட காரணமாக இருக்கலாம் . அப்படி ஒரு வேளை நான் எனது இந்த பொய் சொல்லும் வழக்கத்தினை விட்டுவிட்டெனானால் , சத்திய சோதனை இரண்டாம் பாகம் எழுதலாம் . விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது !!

ஆனாலும் இப்பொழுது யாராவது போனில் , என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டால் ,’ மார்க்கெட்டில் இருக்கிறென் ’ என்று தான் சொல்லத் தோன்றுகிறது . போகிற போக்கில் , ’ சத்திய சோதனை’ யின் இரண்டாவது பாகம் வரவே வராது பொலிருக்கிறது .

மீண்டும் வருகிறேன்!!!

No comments: