Tuesday, April 24, 2007

இந்த வார ஆனந்த விகடன் :

இந்த வார ஆனந்த விகடனில் ( உங்களுக்கு போன வாரம் ) நிறைய ஆச்சரியங்கள் . நான் ரசித்தவை பின்வருவன. மதன் கேள்வி பதில்கள் : வைரமுத்து ஒரு பேட்டியில் கூறியிருந்தார் , மதனின் பதில்கள் நகைச்சுவையொடு ஆரம்பித்து , கடைசியில் நேற்றி பொட்டில் அறைவது போல அமையும் என்று . பாரதியும், தாகூரையும் ஒப்பிட்டு அவர் கூறியிருந்தது இவ்வாறே இருந்தது . தாகூரை ஓரு பக்க அளவிற்கு கூறிவிட்டு , பாரதியய் நாலே வரிகளில் நச்சென்று முடித்து விடுகிறார் . தமிழர்கள் வெட்க பட வேண்டும் என்றும் கூறுகிறார்.அதுவும் சரி தான் , யோசித்து பார்த்தால் , பாரதியின் புத்தகங்களில் சிலவற்றை மனபாடமாக சொல்ல முடியும் , ஆனால் மேற்கோல் காட்டி சொல்லும் அளவிற்க்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும் .தவறு நம்முடையது தான் !சொல்லாததும் உண்மை : ஒரு மொழியினை கற்க , அதன் இலக்கியத்தை தெரிந்திருக்க வேண்டும் என ப்ரகாஶ்ராஜ் கூறுவது , ஒத்துகொள்ள வேண்டியதே . !! எனக்கு ஹின்தி தெரியும் . பரிட்சையில் காப்பி அடித்து தான் பாஸ் செய்தென்., திக்கி திணரி பேசி விடுவேன் என்றாலும் , அதன் இலக்கியத்தை பற்றி எனக்கு ’விஜய்க்கு நடிக்க தெரிந்த அளவு கூட தெரியாது !! அப்படியே ஹின்தி புத்தகங்கள் கிடைத்தாலும் , படித்தால் புரியுமா என்பது தெரியவில்லை .
சுஜாதா தொடர் : வழக்கம் போல , இவரது எழூத்தில் தொற்றி நிக்கும் ஒரு வித ஆணவம் ( எழுத்தால் வந்ததா , இல்லை பிறப்பால் என்றா என்று தெரியவில்லை !!) , இதிலும் உண்டு என்றாலும் , இவரது சில நக்கல்களை ரசிக்க முடிகிறது . இந்த வார தொடரில் , நான் ரசித்தது , " மறுவாழ்கிறார்கள் " என்ற சொல்லை .மறுவாழ்கிறார்கள் என்றால் , மீண்டும் ஒரு முறை வாழ்கிறார்கள் என்று அர்த்தம் கொள்ளலாம்.( வேறு அர்த்தம் இருந்தால் , வெண்மணி தான் சொல்ல வேண்டும் ) . இது போன்ற வார்த்தைகளை எதிர்கொள்ளும் பொழுது , தமிழ் மேல் திடிரென தனி காதல் வருகிறது .
கோல் : கோல் தொடர்கதையினை விடாமல் படிக்கிறேன் . ஒவ்வொரு வாரமும் , ஒவ்வொரு பிரச்சனைகள் . வித்தியாசமான தீர்வுகள் . இது தான் முடிவு என்று தெரிந்து விட்டாலும், அதை அடைவதற்கு அவர்கள் செல்லும் வழிகள் தான் இந்த தொடரின் விறுவிறுப்பு .
ஓரு தொழிர்சாலையய் நடத்துவதற்க்கு இத்தனை விசயங்கள் வேண்டுமா என்று மலைக்க வைக்கிறது . ஆபுதாபியில் அல்ஜசிரா மெட்டல் கம்பனிக்கு சென்றிருந்தேன் . வேலை விசயமாக . அந்த கம்பனியின் டைரக்டர், ஒரு எகிப்தியன் . நேரம் கிடைக்காமல் ஓடிக்கொண்டிருக்கிறான் என்று சொல்வார்களே , அது போல ஓடி கொண்டிருக்கிறான் . செல்லில் கால் வருகிறது , பேசிக்கொண்டிருக்கிறான் , அப்பொழுது அவனை காண மானேஜர் வருகிறார்.தொலைபெசி அழைப்பு வேறு. !!! எனது சேல்ஸ் பீல்டை விட , அவனது பீல்ட் இன்னும் விருவிருப்பாக இருக்கும் போலிருக்கிறது . அதாவது இக்கரைக்கு , அக்கரை பச்சை !!
ஜக்கி குருதேவின் தொடர் , சில சமயம் நன்றாக இருக்கிறது . சில சமயம் கடுப்படிக்கிறது . சங்கரன் பிள்ளை கதைகள் இப்பொழுது குறைந்து விட்டன !!
சுப .வி தொடர் நல்ல ஆரம்பம் . ஞானி வழக்கம் போல . எஸ். ராமகிருஸ்ணனுக்கு எழுதுவதற்க்கு நிறைய விசயங்கள் இருக்கிறது போலும் . அடுத்த வாரம் பற்றி எதிர்பார்த்து காத்திருக்கிறேன் . என்ன கேள்வி என்று தெரியவில்லை .
ஜொக்கிரி .காமில் திருமா சொல்லும் , ஒவ்வொரு டையலாக்கும் குபீர் சிரிப்பு ரகம் . அதுவும் , ஒரு கட்டத்தில் , ராமதாஸ் அடுத்த திட்டம் பற்றி கேட்க, திருமா, வருசத்துக்கு ஐந்து படம் என்று பட்டியல் போடுவது அமர்க்களம்.
சினிமாத்தனம் குறைந்து , விகடன் புது பொலிவுடன் மலர்கிறான் . நடுவே இருந்த தொய்வு நீங்கி , விகடன் மீண்டும் மீண்டு வந்து விடுவான் என நம்புகிறேன் . மீண்டும் வருகிறேன் !!!!

No comments: