Wednesday, April 25, 2007

Mayakannadi

மாயக்கண்ணாடி :
ம .தெ. மு : மாயக்கண்ணாடி படம் பார்க்க நேர்ந்தது . நல்ல திரைக்கதை. அருமையான கதையமைப்பு , மனதை பாதிக்கும் , பளிச்சிடும் வசனங்கள் , முக்கியமாக சேரனின் டைரக்சன் , இவையெல்லாம் இருந்தது , சேரனின் முந்தய படங்களில் . இதில் விசேசமாக ஒன்றும் இல்லை .

ஆட்டோகிராப் , தவமாய் தவமிருந்து போன்ற சேரனின் மற்ற படங்களின் பாதிப்பு இரண்டு நாட்களாவது இருக்கும் . இந்த படத்தை பொருத்தவரை ஏமாற்றம் தான் .

வாழ்கையில் பெரிதாக ஆசைப்படும் இளைஞனின் கதை. இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்படுகிறான் அவன் . முடிவு எல்லாரும் ஊகிக்க கூடியதே . எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் ஒருவனின் ( இதில் ராதாரவி !! ) அறிவுரையால் மனம் திருந்துகிறான்.

கடைசியில் , ராதாரவி பேசும் வசனங்கள் நன்றாக இருக்கிறது . சில ,யோசிக்கவும் வைக்கிறது . ராதாரவியின் அறிவுரைக்கு பிறகு , அவன் திருந்தி அவனுக்கு பிடித்த துறையில் பெரியாளவது போல் காட்டியிருந்தாலாவது , படம் நிறைவடையும் . மீண்டும் அவனது முடி திருத்தும் தொழிலையே செய்கிறான் .வாழ்கையினை அனுபவிக்க கூடாது என்று சொல்கிறிரார்களா , இல்லை பெரிதாக ஆசைப்பட கூடாது என்று சொல்கிறிரார்களா? படம் யதார்த்தமாக இருக்கவேண்டும் என்று , அவற்றை காட்டவில்லை போலும் !! வாழ்கையினை அனுபவிக்க கூடாது என்றும் , பெரிதாக ஆசைப்பட கூடாது என்றும் கருத்து சொல்லிவிடுகிறதே படம் ?

நிறைய எதிர்பார்த்து போனால் , நிறையவே ஏமாந்து திரும்பி வர வேண்டும் .
அதுசரி சார் , கதாநாயகனுக்கு ஏன் குமார் என்று பெயர் வைத்திர்கள் ?

ம.தெ.பி : மாயக்கண்ணாடி படம் சுமாராக இருக்கிறது . சேரன் எதோ சொல்ல வருகிறார் , ஆனால் என்ன என்று தான் தெளிவாக இல்லை . பாடல்கலும் சுமார் ரகம் தான் .பாடல்கள் வேண்டாத இடத்தில் வருகிறது.

. செல்போன் வாங்கிய புதிதில் , அதனை கொண்டாடுவது , மணிக்கணக்கில் பேசுவது எல்லாம் இனிமை. நவ்யா வழக்கம் போல . ஆர்ப்பாட்ட்ம் இல்லாமல் இருக்கிறார் .

முடிவாக : இந்த படத்தை பார்த்து முடித்தவுடன் , அடாவடி படம் பார்த்தேன் . அதனால் , தானோ என்னவோ இப்படமே நன்றாக இருப்பது போல் தோன்றியது .

மீண்டும் வருகிறேன் !!

பின்குறிப்பு : ம . தெ .மு : மப்பு தெளியும் முன் . ம. தெ .பி : மப்பு தெளிந்த பின் .

No comments: